சண்முக மகா வித்தியாலயம்

வரலாறு

பிரதான வாயில்

new3.png
new3.png

காரைதீவின்   தென்  புறத்தே   முருகன் கோயில் சுற்றாடலில் வாழ்ந்த மக்களின் கல்வி  வேட்கையை  தீர்க்க சண்முகானந்தா  சபையினரின் பெரு முயற்சியால் 1953.04.20 இல் இப் பாடசாலையானது உதயமானது. அதன் ஆரம்பப் பெயர் கரடித்தோட்ட தமிழ்க் கலவன் பாடசாலை என்பதாகும். இதன் முதல் அதிபராக திருவாளர் க.செல்லையா அவர்களும், ஆசிரியராக திருமதி.மங்கயற்கரசி சுந்தரம்பிள்ளை அவர்களும் கடமையாற்றினர். தரம் 01 இல் இணைந்து கொண்ட 20 மாணவர்களில் முதல் பதிவாக செல்வன் பெ.விநாயகமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. அக்கால கட்டத்தில் இராமகிருஷ்ண மிஷன் பல்வேறு இடங்களிலும் தங்கள் நிர்வாகத்தின் கீழ் பல பாடசாலைகளை அமைத்து பராமரித்து வந்தமையால் எமது கிராமத்தை சேர்ந்த சுவாமி நடராஜானந்தா ஜீ  அவர்களின் துணையோடு சண்முகானந்தா சபையிடமிருந்து இப் பாடசாலைggயும் தங்களது     26 ஆவது பாடசாலையாக பொறுப்பேற்று பராமரிக்கப்பட்டு வந்தது. அப்போது தான் கரடித்தோட்ட இராமகிருஷ்ண மிஷன்  வித்தியாலயம் என அழைக்கப்பட்டது.அரசின் இலவச கல்வி திட்ட அமுலாக்கலின் விருத்தி காரணமாக 1961 முதல் கமு/ சண்முக வித்தியாலயம் என்ற பெயரில் அரசின் நிர்வாகத்தின் கீழ் பொறுப்பேற்கப்பட்டது.

 

அரசு பொறுப்பேற்ற பின்னர் திரு.க.ஆறுமுகம் (அதிபர்), திரு.க.வெற்றிவேல்  (அதிபர்), திரு.கே.மயில்வாகனம்  (அதிபர்), திரு.ப.கிருஷ்ணபிள்ளை  (அதிபர்), திரு.பி.நல்லலிங்கம்  (அதிபர்), திரு.பி.திருநாவுக்கரசன்  (அதிபர்), திரு.கே.பொன்னம்பலம்  (அதிபர்) அவர்கள் தரம் 1 தொடக்கம் 8 வரை மாணவர்கள் கல்வி கற்க வாய்ப்பை உருவாக்கி நடத்தி வந்தனர். 1991 இல் திரு.வெ.ஜெயநாதன் (அதிபர்) க.பொ.த சாதாரண தரம் வரை பாடசாலையை தரம் உயர்த்தி மாணவர்கள் கல்வி கற்க வாய்ப்பை உருவாக்கியதோடு பௌதீக வள அபிவிருத்தியும் ஏற்பட்டது.  திரு.வே.ஜெயக்குமார்  (அதிபர்) அவர்களின் காலப்பகுதியில் க.பொ.த உயர்தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு 2006 இல் க.பொ.த உயர்தர பரீட்சையில் செல்வன் ஆர்.புஷ்பகாந்த் 3A  சித்தி பெற்று சாதனை படைத்தான். அதனை தொடர்ந்து திரு.கே.முத்துலிங்கம் (அதிபர்) அவர்களின் காலப்பகுதியில் கணினி பிரிவு ஆரம்பிக்கப்பட்டு கல்வி அபிவிருத்ஏற்பட்டது. திரு.ஆர்.ரகுபதி (அதிபர்) அவர்கள் 2011 இல் இருந்து பௌதீக வள, கல்வி அபிவிருத்திக்கு பாடுபட்டு உழைத்தார். 2020 இல் திரு.எஸ்.மணிமாறன் (அதிபர்) அவர்கள் பாரமெடுத்து இற்றைவரை பௌதிக வள அபிவிருத்திக்கு குறிப்பாக கரப்பந்தாட்ட மைதானம் மற்றும் பிரதான கேற் நவீன முறையில் அமைக்கப்பட்டதோடு கல்வி, இணைப்பாட  விதான செயற்பாடுகள் மாகாணம், தேசியம் என்ற வகையில் முன்னேறிக் கொண்டு வருகின்றது.