சண்முகன் கரிமுகன் தனிமுதல் வாழ்க
சற்குரு மாணவர் தபோதனர் வாழ்க
வாழ்க... வாழ்க... வளர்க... வளர்க...
கார் முகில் தவழுமூர் கதிரொளி பரவுமூர்
பேர்ப்புகழ் திகழுமூர் பேதைமை அகலுமூர்
சண்முக வித்தியாலயம் தண்ணொளி பெருக
சண்முக நாதனின் தன் அருள் பொழிக
வாழ்க... வாழ்க... வளர்க... வளர்க...
சண்முக சபாவின் தயாள குணத்தினால்
தன்னிறைவு காண தளராது வளர்க
பரமகம்சமுனி பத்த நட ரஜமுனி
பரமன் அருளால் பதித்தான் வித்தியாலயம்
வாழ்க... வாழ்க... வளர்க... வளர்க...
சத்தியம் சன்மார்க்கம் தளைத்திட மாணவர்
நித்தியம் உழைப்பது நிறைவின் சத்தியம்
மாசிலா மாணவர் வாழ்க வளர்க
ஆசிரியர் குழாம் அன்பினில் நிறைக
வாழ்க... வாழ்க... வளர்க... வளர்க...





